About AMK

1.அ மு க பற்றிய விளக்கம்

அறவோர் முன்னேற்றக் கழகம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம்ராஜாளிபட்டியில்  வசிக்கும் ஸ்ரீ சீ.ஜெயபிரகாஷ் ஐயர்  M.A.B.L., வழக்கறிஞர் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது. இந்த கட்சியின் பொதுச் செயலாளர் மாங்காடு G.பாலாஜி ஆத்ரேயா ஆவார்.

அறவோர் முன்னேற்ற கழகத்தின் தீர்மானத்தின்படி சாதி மத உட்பிரிவு பேதமின்றி அறவோர் வாழ்வு மேன்மை பெற,அறவோர் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி செயல்படும் என்று அமுக நிறுவனத் தலைவர் ராஜாளி ஸ்ரீ சீ. ஜெயபிரகாஷ் ஐயர் M.A.B.L., வழக்கறிஞர் அவர்களால் முன்மொழியப்பட்டு மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு வின் முன்வைக்கப்பட்டு ஒருமனதாக பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இனி அறவோர் முன்னேற்ற கழகத்தின் நடவடிக்கைகள் சட்டதிட்ட நெறிமுறை படி செயல்படுத்தப்படும்.


கொடி விவரம் :-

இவ்வமைப்பின் கொடி காவி வண்ணம் அதன் மத்தியில் சாணக்கியனின் உருவம் இடம்பெற்றிருக்கும்.

கொடியின் விளக்கம்:-

இந்த அமைப்பின் கொடியில் சமதர்மத்தை வலியுறுத்தும் காவி வண்ணம் அதன் மத்தியில் சாணக்கியனின் உருவம் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றிருக்கும்.

கட்சியின் குறிக்கோள்:-

தமிழக மற்றும் இந்திய அளவில் வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் இழந்த அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பது, அவர்கள் வாழ்வு மேன்மை பெற போராடுவதே கட்சியின் குறிக்கோள் ஆகும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தலைநிமிர்ந்து ,தன்மானத்துடனும், ஏழை மனிதனின் வாழ்க்கைத் தரம் மேன்மை பெறவும் போராடுவதே, இவ்வமைப்பின் முதன்மை நோக்கமாகும்.

கட்சியின் நோக்கங்கள்:-

இந்திய திருநாட்டில் சாணக்கியன் ,வாஞ்சிநாதன் மற்றும் வா வே சு ஐயர் போன்ற சான்றோர் வழியில், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்த்து அரசியல் சக்தியாக வளர்த்தெடுப்பது. அனைத்து மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத் தன்மை அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றிற்கு  உட்பட்டு அறவோர் வாழ்வு வளம்பெற பாடுபடுவது.

அரசியல் சமூகம் பொருளாதார மேம்பாடு மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் அறவோர் பங்களிப்பை நிறுவுவது.

மதம் மற்றும் ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட அறவோர் மீது நடத்தப்படும் வன்முறை, ஏற்படுத்தப்படும் இழிவுகள், அறவோர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடி  சமுதாயத்தை காப்பது.

நாட்டின் நலனுக்காகவும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் விழிப்புடன் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதும் இவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராமல் பாடுபடுவது சமுதாய ஒற்றுமை சமூக ஒற்றுமை பேணிக்காப்பது.

கல்வி ,வேலைவாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின்  பொருளாதார பின்னணி ( on  economic background)அடிப்படையில் ஒதுக்கீடு பெறுவதற்கான முறையை பெற்றுத் தருவதற்கு பாடுபடுவது. 

மகளிருக்கு எதிரான மாற்று மத இன ஆண் ஆதிக்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் ஒழித்து பாலின சமுத்துவத்தை நிலை நாட்டுவது.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள நமது சமுதாயத்தினரின்  குடும்ப உறுப்பினர் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேற்றமும் இல்லாமல் மிகவும் பின்தங்கி உள்ளார்கள், இவர்களை கைதூக்கி விடும் விதத்தில் பாடுபடுவது.

சமுதாய மக்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் சட்டபூர்வமாக வழங்குவது தேவையான நிதியை வசதியுள்ள ஈகை குணம் உள்ள நம் அறவோர் சமுதாய மக்களிடம் இருந்து பெற்று எந்த நோக்கத்திற்காக நிதி பெறப்பட்டதோ அதே நோக்கத்திற்காக செலவிடுவது.

அறவோர் முன்னேற்ற  கழகம் என்பது சாதி மத அரசியலுக்கு மக்கள் பலியாக விடாமல் தடுக்கவும், உணவு, உடை ,சுகாதாரம் ,கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளைப் பேணி காக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.


அமைப்பின் செயல் திட்டங்கள்:-

ஒடுக்கப்பட்ட அறவோர் சமுதாய மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியிலும் சட்டபூர்வமான வழியிலும் பாடுபடுதல்.

அறவழிப் போராட்டத்தின் மூலம் உரிமை மீட்க பாடுபடுதல்.

தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் முழுமூச்சுடன் எதிர்த்தல்.

இளைஞர்கள் வன்முறை வழியில் செல்லாமல் தடுக்க அறவழிப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அதன் வழி முறைகளைக் கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்த நெறியாளர்களாக  உருவாக்க பாடுபடுதல்.

மதவெறி, வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்கு பாடுபடுவது.

 மக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியை நீக்கும் வகையில் அவர்களுடன் கலந்துறவாடுதல், பெரியோர்கள், சான்றோர்களின் சனாதன தர்மம் போதனைகளை அவர்களிடம் கொண்டு செல்லுதல். 

சனாதான தர்மம் ,நமது கலாச்சாரம் காத்திட இளைய சமூகத்திடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

மதத்தின் பெயரால் பாமர மக்கள் ஏமாற்றப்படுவதையும், சுரண்டப்படுவதையும், மூடநம்பிக்கைகளையும் பிரச்சாரத்தின் மூலம் தடுக்கவும், மக்கள்  விழிப்படையவும் பாடுபடுதல்.

 பெண்களுக்கு உரிய உரிமைகளை வழங்கியிருந்தும்  நடைமுறையில் அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்க அயராது உழைத்தல்.

சமுதாயத்தில் நிலவும் மக்களுக்கு விரோதமான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் நற்போதனை மூலம் திருத்த பாடுபடுதல், அனாதைகள் முதியோர் ,கைவிடப்பட்டோர் ஆகியோரின் நலன் காக்க பாடுபடுதல் ,சனாதன தர்மம் மற்றும் உலக கல்விக்காக பாடசாலை மற்றும் கல்வி கூடங்கள் பராமரித்தல் நிறுவுதல்.

தீண்டாமை ,வரதட்சனை, வட்டி உள்ளிட்ட சமூக கொடுமைகளுக்கு எதிராகவும், அந்தணரை கேவலமாகவும் ஆபாசமாகவும் சித்தரிக்கும் திரைப்படங்களுக்கு எதிராகவும் ,மனித வாழ்வை சீரழிக்கும் மது,போதைப் பொருள், புகையிலை பொருள்கள் ,சூதாட்டம் போன்றவற்றை ஒழிக்க பாடுபடுதல்.

அடக்கு முறைகளுக்கும் வரம்பு மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ,சமமற்ற இட ஒதுக்கீடு சட்ட மீறல்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுதல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும்  தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்தல்.

 சமுதாய மக்களுக்கு அச்சுறுத்தலோ பாதிப்புகளோ  ஏற்பட்டால் அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.

அனைத்து மத இன மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுவது. 

மத இன வேறுபாடின்றி அனைவருக்கும் பயன்படும் வகையில் மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் நடத்துதல், மருத்துவ ஊர்தி அதாவது ஆம்புலன்ஸ்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் பராமரித்தல் அமைத்து நிர்வகித்தல் இவை அனைத்தையும் முற்றிலும் இலவசமாக செய்தல்.

பேரிடர்கள் ஏற்படும் பொழுது மனித நேயத்துடன் களமிறங்கி மத வேறுபாடின்றி  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்.

மக்கள் அறிவை பெருக்கிக் கொள்வதற்காக நூலகங்கள், பயிற்சி நிலையங்கள் அமைத்தல்.

சனாதன தர்மத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து அறப்பணிகளையும் நடைமுறைப்படுத்த பாடுபடுதல்.

பத்திரிகைகள் ,மலர்கள், நூல்கள், பிரசுரங்கள் சுவரொட்டிகள், ஔி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.

பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், மாநாடுகள் நடத்துதல், தொலைக்காட்சி ,வானொலி நிகழ்ச்சிகளை வழங்குதல்.

அறவோர் முன்னேற்ற கழகத்தின் நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும் விஞ்ஞான தகவல் தொடர்பு சாதனங்களையும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.

மேற்கண்ட பணிகளை செய்வதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல், சந்தா நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல் ,நோக்கங்கள் நிறைவேறவும் திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்பு குழுக்களையும்  அமைப்புகளையும் ஏற்படுத்துதல்.

மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைப்பின் செயல் திட்டங்களை நிறைவேற்ற இவ்வமைப்பு பாடுபடும்.

உள்ளாட்சி, சட்டசபை ,பாராளுமன்றம், ஜனாதிபதி ஆகிய தேர்தலில் இவ்வமைப்பு நேரடியாகவோ அல்லது இந்த இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான அறவோர் முன்னேற்ற கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் நபர் உடனோ அல்லது இயக்கத்துடனோ கூட்டணி சேர்ந்தலோ, மேற்குறிப்பிட்ட நபருக்கோ அல்லது இயக்கத்திற்க்கோ ஆதரவு அளிப்பது.

உள்ளாட்சி ,சட்டசபை ,பாராளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் இவ் அமைப்பின் உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதைப்பற்றி இவ்வமைப்பின் மேலாண்மை குழு (நிர்வாக குழு மற்றும் செயற்குழு) கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

உள்ளாட்சி ,சட்டசபை, பாராளுமன்றம், ஜனாதிபதி ஆகிய தேர்தலில் அவசியம் ஏற்பட்டால் கொள்கைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்தல். 

இயக்கத்தின் உறுதிமொழி :-

இயக்கத்தில் இணையும் ஒவ்வொரு நபரும் இயக்கத்தின் உறுதிமொழியை பின்பற்றவேண்டும்.

இயக்கத்தின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இயக்கத்தின் அமைப்பு சட்டத்தின் படி நடப்பதற்கும், இயக்கத்தின் முடிவுகளை விசுவாசமாக நிறைவேற்றுவதற்கும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஏற்றத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கு பாடுபடுவேன் .

எனது சொந்த நலன்களை போல் இயக்கத்தின் நலன்களுக்கும் மக்களுடைய நலன்களுக்கும் எப்போதும் உட்படுத்திக் கொண்டு, ஏழை மக்களுக்கும், நாட்டிற்கும் தன்னலமற்ற முறையில் சேவை செய்ய பாடுபடுவேன்.என்ற எண்ணமுடையவர்கள் உறுப்பினராக இணையலாம்.                     


                                                     

அதர்மம் அழிந்திட                                                                  தர்மம் காத்திட

அறவோர் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றுப்படுவோம்.